About the Journal

A very warm greetings to all the Tamil speaking people across the globe. "Pulam" journal will emerge as a quarterly e- journal from April 2021. The word "Pulam" has many denotative meanings such as landscape, keenness, knowledge, excetra.  As "Pulam" refers to land, it is also attributed to the different landscapes. It also means wisdom and intelligence. It brings out the intelligence that is a feature of the landscape. Similarly, "Pulam" remains as an embodiment of all the knowledgeable researches carried out on earth. 

"Pulam" as a journal is based on the research findings upon the landscape. It is generally told by the philosophers that 'Change alone is unchangeable'.  However, the research modes, meanings and platform may vary but research remains static and unchangeable. 

This journal publishes only highly authentic and original articles. It's primary objective also rests in conducting virtual and physical workshops and conferences. Moreover, the special issue of book containing articles are planned to be released in the conferences and workshops. I request the scholars and researchers to contribute their original research papers to the journal.

 உலகம் முழுதும் பரவியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலக மக்கள் அனைவருக்கும் வணக்கம். புலம் மின்னிதழ் ஏப்ரல் 2021 முதல் காலாண்டிதழாக வெளிவருகின்றது. புலம் என்ற சொல்லுக்கு நிலம், நுண்மை, அறிவு எனப் பல பொருண்மைகளை அகராதிகள் முன்வைக்கின்றன. புலம் நிலத்தைக் குறிக்கும் தன்மையாக அமைவதால் அஃது திணையையும் சுட்டுவதாகக் கொள்ளலாம். அறிவு நுண்ணறிவு என்றும் பொருள்படுகிறது. இந்நிலத்தின்கண் அமைந்த நுண்மையான அறிவினை வெளிப்படுத்துகிறது. அவ்வாறெனில் நிலத்தில் நடக்கின்ற அனைத்து நுண்மையான அறிவுசார்ந்த ஆராய்ச்சியை வெளிப்படுத்துவதாகப் புலம் அமைகின்றது.

புலம் தமிழ் நிலம் சார்ந்தும் அதன்கண் நிகழும் ஆய்வு சார்ந்தும் இயங்கும் இதழாகும். மாற்றம் ஒன்றே மாறாத் தன்மையுடன் இருப்பதாகத் தத்துவவியலாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இங்கு ஆய்வு சார்ந்த பொருண்மைகள் மட்டுமே மாறும் தன்மையுடனும் ஆய்வு ஆராய்ச்சி என்பது மாறாத் தன்மையுடன் காணப்படுவதை நாம் உணர முடியும். இவ்விதழ் தரமான ஆய்வுக்கட்டுரைகளை மட்டுமே வெளியிடும்.

இணையவழியிலும் நேரடியாகவும் கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளை நடத்துவதும் இதன் இன்றியமையாத பணியாகும். மேலும், கருத்தரங்குகள் வழியே ஆய்வுக்கட்டுரைகளைச் சிறப்புப் பதிப்பாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. சான்றோர்கள் ஆய்வுக் கட்டுரைகளை இதழுக்கு அளித்து தங்களது பங்களிப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புலம் வெண்பா
எல்லை யிலாத இதழ்கள் இருப்பினும்
இல்லை இதுபோல் இதுபோதும் - மெல்லத்
தமிழினி வாழும் தழைத்திடும் எங்கும்
வழங்கும்நல் ஆய்வை புலம்

மனித மனத்தின் வளர்ச்சி யறிகுறி
இன்னும் பலபுதுமை செய்குவதாம் - மென்தமிழால்
மேலும் ஒருமகுட மேற்றிட வாரும்
வலுப்பெறும் கல்விப் புலம்

புலன்கள் பலவகைப் பூமியில் உள்ளன
காலம் கொடுக்கும் கருவியிது - சாலச்
சிறந்த தமிழாய்வுக் கட்டுரை ஈயும்
அறிவில் வளரும் புலம்

அறிவால் உலகில் அனைத்தும் இயலும்
அறிவீர் அருமை அறிஞரே - ஆற்றல்
வளத்தை அளியும் வளம்பெறும் உண்மைக்
களத்தை அமைக்கும் புலம்

தரநிலைக் கொள்கை தமிழின் புலத்தில்
வரவேண்டும் அஃதே அதுநன்றாம் - சீர்மிகு
ஆய்வைத் தருவதில் ஆய்வாளர் காண்பதும்
மெய்யாய் தருமிப் புலம் - மசிவன்