பூமணியின் நாவல்களில் குடும்பச் சிக்கல்கள்

Family Issues in Poomani’s Novels

Authors

  • முனைவர் க. வினோத்குமார் | Dr. K. Vinodhkumar 47/106 Kalaimagal street, Bodinaickenpatty, Salem - 636 005

Abstract

Abstract

Family is an essential social institution in society. Family is the root and foundation of society. The family is the symbol that brought the man who lived like an animal in the beginning to a civilized state. It is the family system that reflects the culture of a society. An individual forms a family through marriage. Family is the cause of society formation. It is the family system that helps man to live on the right path so that he does not get down from his position and does not deviate from the positions of love, compassion, affection, discipline etc. Through the family system man can get his needs in the right way.

ஆய்வுச்சுருக்கம்

குடும்பம் என்பது சமுதாயத்தில் இன்றியமையாத சமூக நிறுவனமாகத் திகழ்கிறது. குடும்பமே சமூகத்தின் ஆணிவேராகவும், அடித்தளமாகவும் அமைகிறது. ஆதிகாலத்தில் விலங்குபோல் வாழ்ந்து வந்த மனிதனை நாகரிக நிலைக்குக் கொண்டு வந்த அடையாளமே குடும்பம் ஆகும். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை, கலாச்சாரத்தை உணர்த்துவது குடும்பம் என்ற அமைப்பேயாகும்.

தனிமனிதன் திருமணத்தின் மூலம் குடும்பத்தை உருவாக்கிக் கொள்கிறான். குடும்பமே சமுதாய உருவாக்கத்திற்குக் காரணமாகிறது. மனிதன் தன் நிலையிலிருந்து தாழ்ச்சி அடையாமலும் அன்பு, பரிவு, பாசம், ஒழுக்கம் போன்ற நிலைகளிலிருந்து தவறாமலும் சரியான பாதையில் வாழத் துணைச் செய்வது குடும்ப அமைப்பே ஆகும். குடும்ப அமைப்பின் மூலம் மனிதன் தன்னுடையத் தேவைகளைச் சரியான வழியில் பெற முடிகின்றது.

“குடும்பமே சமூகத்தின் மிகச்சிறிய ஆனால் அதிநெருக்கமான குழுவாகியுள்ளது. இங்குதான் மனிதவர்க்கத்தினுடைய ஒற்றுமை, பாசம் போன்ற உன்னத ஆசைகளும் தேவைகளும் முழுமையாக திருப்தி பெறுகிறது''(சி.என். குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப.192.)

என்ற கருத்துவழி மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் உருவாக்கிக் கொண்ட ஓர் அமைப்பு குடும்பம் என்பது புலனாகின்றது.

Downloads

Published

01-07-2022

How to Cite

Dr. K. Vinodhkumar. (2022). பூமணியின் நாவல்களில் குடும்பச் சிக்கல்கள்: Family Issues in Poomani’s Novels. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(3), 28–39. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/106