பன்முகப் பார்வையில் பாண்டியன் பரிசு

The Pandian Parisu in a multifaceted perspective

Authors

Abstract

Abstract

               The Pandian Parisu is a short epic. The epic is based on the ark of the covenant. All the people live in the era of democracy. The revolutionary poet Bharathidasan has created an epic by creating a revolution in fiction by marrying the son of a thief leader who is a member of the royal family. Therefore, the Pandyan Parisu epic is a revolutionary epic.Kathiraivelan, Arasamadevi, Annam, Narikkannan, Ponnamman, Veerappan, Athal, Velan, Seeni (Kanakkayan), Neelan and Neeli are the characters in the Pandian Prize short story.In this epic, Velan - Annam and Neelan - Neeli are the lovers. Annam is also the epic leader in the epic. Velan is the epic leader.Neelan plays the son of Narikkannan's minister and Neeli is Anna's friend.The female characters Arasamadevi Annam Andal Neeli are featured in the epic as female characters.The purpose of the poem is to highlight the generality of life and human nature.There are no poets who do not describe the general nature of life and human nature. In that sense, Bharathidasan goes on to say that he is a lover of nature. The purpose of the poem is to convey character. There are no human beings without enjoying nature. Nature and the human mind are intertwined. The one who knows nature is the scholar. The one who realizes is the poet.The character of Athal Kizhavi, who is the top debtor in the country, saves Annath.Style is divided into prose style and prose style. Verbal style, clarity of meaning, music style and team style remain the same. Poetry style is the style of prose that is learned in everyday life.In literary style, metaphorical language is one of the distinctive features of language personality.Team means beauty. Team that makes poetry beautiful.References: Epic, Pandya Parisu, Tamil Literature

ஆய்வுச் சுருக்கம்

            பாண்டியன் பரிசு ஒரு சிறு காவியம். இந்த காவியத்தில் ஆட்சி உரிமையைக் கொண்ட பேழையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. மக்கள் அனைவரும் வாழும் காலங்கள் குடியாட்சிக் காலம். அரச குடும்பத்துக் கதையைச் சாதாரண மக்கள் குடும்பத்தைச் சார்ந்த கவிஞர் காவியமாகப் படைத்துள்ள பெருமை பாண்டியன் பரிசு காவியத்தையே சாரும். அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவனாகத் திகழ்ந்துக் கொண்டு இருக்கின்ற திருடர் தலைவனின் மகனைத் திருமணம் செய்து கற்பனைக் கதையில் புரட்சியை உருவாக்கிக் காவியத்தைப் படைத்து இருக்கின்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். குடியாட்சிக் காலத்திலும் முடியாட்சிக் கதையாக அமைந்த காவியமாக தன் திகழ்கின்றது. ஆதலால் பாண்டியன் பரிசு காவியம் புரட்சிக் காவியமாகத் திகழ்கின்றது. இந்த புரட்சிக் காவியத்தில் கதிர்நாட்டு அரசன் அன்னம் அடைய இருக்கும் எதிர்கால வாழ்வும் ஆட்சியும் திருமணமும் பேழையுள் அடங்கியுள்ள ஆவணத்தில் அமைந்திருப்பதாக அறியக்கிடக்கின்றது. வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள பொதுத் தன்மையை எடுத்துக் கூறுவது கவிதையின் நோக்கமாகும். நிலம், நீர், ஆகாயம் காற்று, நெருப்பு ஆகிய ஐம்பெருங் பூதங்களால் ஆனதே இயற்கை ஆகும். மனிதனுடைய வாழ்வில் இயற்கை முக்கிய இடம் வகிக்கின்றது. இயற்கையை ரசிக்காமல் மனிதர்கள் இல்லை. இயற்கையும் மனித மனமும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு இருக்கின்றது. நடையினை செய்யுள் நடை, உரைநடை என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சொற்செறிவு, பொருள் தெளிவு, இசை நயம், அணி நயம் ஆகியன மாறாமல் அமைந்து வருவது செய்யுள் நடை. அன்றாட வாழ்க்கையில் பயின்று வரும் நடை உரைநடை. இலக்கிய நயத்தில் உவமை நயம், மொழி ஆளுமை இடம்பெற்றுள்ளமைச் சிறப்பிற்கு உரிய ஒன்றாகும். அணி என்றால் அழகு என்பது பொருள். கவிதைக்கு அழகு செய்வன அணிகள். ஒரு பொருளை இயல்பாகக் கூறாமல் அழகாகக் கூறினால் கேட்பவர்களுக்கு இன்பம் பயக்கின்றது.

Downloads

Published

01-04-2023

How to Cite

K.Kavitha. (2023). பன்முகப் பார்வையில் பாண்டியன் பரிசு: The Pandian Parisu in a multifaceted perspective. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(2), 17–26. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/126