பொருண்மை நோக்கில் மல்லல் எனும் சொல்

Porunmai nokkil Mallal yenum Chol

Authors

  • முனைவர் சோ.நடராசு | Dr S.Nataraj Assistant Professor, Department of Tamil, Thavaththiru Santhalinga Adigalar Arts Science Tamil College, Perur, Coimbatore – 10.

Keywords:

மல்லல், மல்லர், மல்லன், வளம், வீரன், மன்னன், மள்ளர், உரிச்சொல், Mallal, Mallar, Mallan, Valam, Veeran, Mannan, MaLLar, Urichol

Abstract

Abstract

            A single letter or more than one letter referring to an object is called a word. This word can be divided into two categories as grammatical word and literary word. Among them, the grammatical words are noun, verb, interjection and adjective. Among these, adjectives come inseparable from nouns and verbs. Adjectives refer to characteristics of a noun or verb. It can be divided into multi-word for one object and single word for many objects. These are mostly passive learning. In this way, the adjective Mallal can be found with all kinds of grammars for the above-mentioned adjective through various literatures. The etymological interpretation given by various poets to this word which various poets have used at various places in their hymns, Based on this explanation, the places where the word Mallal is located in the literature, when the same word is changed to Mallar and Mallan, the meaning of hero and mannan they give, the places where they are located in the literature, the semantic interpretation of the word Mallal, the difference between the words Mallar and Mallar, and the impact of this word on the society. This review article is meant to illustrate.

ஆய்வுச் சுருக்கம்

                   பொருளைக் குறித்துவரும் தனி எழுத்தோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ சொல் எனப்படும். இச்சொல் இலக்கணச் சொல், இலக்கியச் சொல் என இருவகைப்படும். அவற்றுள் இலக்கணச் சொற்களாக அமைவன பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியன. இவற்றுள் உரிச்சொல் என்பது பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். பெயருக்கு அல்லது வினைக்கு உரிய பண்புகளைக் குறிப்பதாக உரிச்சொற்கள் வரும். இது ஒரு பொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல் என இருவகைப்படும். இவை பெரும்பாலும் செய்யுளில் பயின்று வரும் தன்மையுடையன. அவ்வகையில் மல்லல் எனும் உரிச்சொல் மேற்கூறிய உரிச்சொல்லிற்கான எல்லா வகையான இலக்கணங்களையும் கொண்டு திகழ்வதைப் பல்வேறு இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது.  பல்வேறு புலவர்களும் தங்களில் பாடல்களில் பல்வேறு இடங்களில் கையாண்டுள்ள இச்சொல்லிற்குத் தொல்காப்பியச் சொல்லதிகார உரியியல் தரும் விளக்கம், அவ்விளக்கத்தின் அடிப்படையில் மல்லல் எனும் சொல் இலக்கியங்களில் அமைந்துவரும் இடங்கள்,  அதே சொல் திரிந்து மல்லர், மல்லன் என வரும்போது அவை தரும் வீரன், மன்னன் எனும் பொருள்கள், அவை இலக்கியங்களில் அமைந்து வரும் இடங்கள், மல்லல் என்ற சொல்லின் சொற்பொருள் விளக்கம், மல்லர் – மள்ளர் எனும் சொற்களுக்கு இடையேயான வேறுபாடு, இச்சொல் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை எடுத்துக் கூறுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

Downloads

Published

01-07-2023

How to Cite

முனைவர் சோ.நடராசு. (2023). பொருண்மை நோக்கில் மல்லல் எனும் சொல்: Porunmai nokkil Mallal yenum Chol. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(3), 42–49. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/140