நெய்தல் நிலமக்களின் ஆடைகளும் அணிகலன்களும்

Various types of clothes and Ornaments of the people of the neythal Land

Authors

  • முனைவர் தி.தர்மலிங்கம் | Dr T. THARMALINGAM Assistant Professor in Tamil, Arignar Anna Govt. Arts and Science College, Karaikal-609605. https://orcid.org/0009-0009-8277-3544

DOI:

https://doi.org/10.1024.pulam.0005

Keywords:

திறவுச்சொற்கள் ஆடைகள், அணிகலன்கள், வட்டுடை, தாளிதம், ஈரணி, கச்சை, குப்பாயம், கஞ்சுகம், வடகம், புட்டகம், தொடி, இழை, குடகம், செம்பொன்வளை, நவமணிவளை, சங்கவளை……

Abstract

Abstract

People living in ancient times wore clothes for concealment and beauty. They also wore ornaments to beautify themselves. The Kurinji people were the first to make and wear ornaments. They were followed by Marutham, Mullai and Neithal Nilams. Primitive people used leaves as clothing. Later on, clothes were woven and worn from silk, cotton, rat hair etc. The beauty, quality and length of the dress varies depending on the wearer. The clothes were bought and worn according to the desire and comfort of the people in the price, size, length, width and required size.  The culture and customs also change in the clothes and ornaments they wear. Women played ball in white sarees. Red colored flower-worked fine sarees similar to checker van are sold in Madurai city. They bought and wore the woven cloth at the price and size according to their convenience. They called them various types of clothes. That name is thuni, thunthu, aruvai, thukil. . The flowers and leaves of various trees available in Neythal land like Punnai, Thala, Adumbamalar, Neythal flower etc. were dressed as clothes.  Also weaving is a maritime land. Neythal land people mostly live in the coastal area. So they wore ornaments made from pearls and conch found in the sea. Due to trade communication by sea, foreign high quality goods were also imported. They used to make ornaments with gold, rubies, pearls, etc. The research paper reveals information’s about the clothing and ornaments or jewelleries worn by the neythal land peoples.

 ஆய்வுச்சுருக்கம்:

             பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் அற்றம் மறைப்பதற்காகவும், அழகுக்காகவும் ஆடைகளை அணிந்தனர். தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்ள அணிகலன்களையும் அணிந்து கொண்டனர். குறிஞ்சி நிலமக்கள் முதன் முதலில் அணிகலன்களை உருவாக்கி அணிந்தனர். அவர்களைத் தொடர்ந்து மருதம், முல்லை, நெய்தல் நிலமக்களும் அணிகலன்களை அணிந்து கொண்டனர். ஆதிகால மக்கள் இலை, தழையை ஆடையாக உடுத்தினர். பின்னாளில் பட்டு, பருத்தி, நார், எலிமயிர் முதலியவற்றினால் ஆடைகள் நெய்து அணிந்தனர். ஆடையின் அழகு, தரம், நீளம் என்பவை அதனை உடுப்போரைப் பொறுத்து மாறுபட்டிருக்கும். ஆடையணியும் நபர்களின் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ற விலையிலும், அளவிலும், நீளமாகவும், அகலமாகவும் தேவையான அளவிலும் வாங்கி அணிந்து கொண்டனர். பண்பாடு, பழக்கவழக்கங்கள் அவர்கள் அணியும் ஆடை, அணிகலன்களிலும் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெண்ணிறப் புடவைகளை அணிந்து பெண்கள் பந்தாடினர். செக்கர் வானைப் போன்ற செவ்வண்ணமூட்டிய பூந்தொழில் செய்யப்பட்ட நுண்ணியப் புடவைகள் மதுரை நகரில் விற்கப்பட்டுள்ளன. நெய்யப்பட்ட ஆடையை அவரவர் வசதிக்கேற்ற விலையிலும், அளவிலும் வாங்கி  அணிந்து கொண்டனர். அவற்றைத் துணி, துண்டு, அறுவை, துகில் என்று அழைத்தனர். நெய்தல் நிலத்தில் கிடைக்கக்கூடிய புன்னை, தாழை, அடும்பமலர், நெய்தல் மலர் போன்ற பலவகையான மரங்களின் மலர்களையும் அதன் இலைகளையும் ஆடையாக உடுத்தினர்.  மேலும் நெய்தல் கடல் சார்ந்த நிலம். நெய்தல் நிலமக்கள் பெரும்பாலும் கடலோரப் பகுதியில் வாழ்பவர்கள். ஆகையால் கடலில் கிடைக்கும் முத்து, சங்கு போன்றவற்றின் மூலம் செய்த அணிகலன்களையே அணிந்தனர். கடல் மூலமாக வாணிகத் தொடர்பு ஏற்பட்டதால், வேறுநாட்டு உயர்ரக ஆபரணப் பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டன. பொன், மாணிக்கம், முத்து, போன்றவற்றைக் கொண்டு அணிகலன்களைச் செய்தணிந்தனர். நெய்தல் நிலமக்கள் அணியும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் குறித்த செய்திகளை ஆய்வுக் கட்டுரை எடுத்துரைக்கிறது.

Downloads

Published

01-10-2023

How to Cite

Dr T. THARMALINGAM. (2023). நெய்தல் நிலமக்களின் ஆடைகளும் அணிகலன்களும்: Various types of clothes and Ornaments of the people of the neythal Land. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 47–57. https://doi.org/10.1024.pulam.0005