பரம்பிக்குளம் வட்டார மலசர் வாழ்வியல்

Life of Malasar of Parambikulam Regin

Authors

DOI:

https://doi.org/10.1024.pulam.0001

Abstract

Abstract

Thousands of years have passed since the birth of the world. Until today, it has not been possible to accurately predict its origin. Anthropologists say that the primitive man certainly would not have lived together in a group. The primitive man wandered alone in the forests and hills, giving priority to the basic emotions like hunger, lust, and sleep like animals. He was wandering as a nomad without civilization. Eventual-ly, the human race saw the benefit of group life and stayed in the natural resources and water bodies. Next he started living by setting up residences. The human society has grown from the tribal system. These tribal people live their lives in harmony with nature.People who live a normal life without luxury,no matter how developed the his-tory is or how much science has developed they still continue to live their traditional life. Despite being denied permission to enter the forest area completely, they are liv-ing a peaceful and healthy life in the places reserved for them, despite facing crises, disasters and destruction at various times, they lead a life of pride that has not changed. This article examines family structure: food system, beliefs, livelihoods.

ஆய்வுச்  சுருக்கம்

உலகம்  தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுவரை அதன் தோற்றம் குறித்து மிகச் சரியாகக் கணித்துச்சொல்ல இயலவில்லை. ஆதிகால மனிதன் நிச்சயமாக ஒரு குழுவாக இணைந்து வாழ்ந்திருக்கமாட்டான் என்பார்கள் மானிடவியலாளர்கள். விலங்குகளைப்போலப்  பசி, காமம், உறக்கம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளுக்கு முதன்மையளித்துக் காடுகளிலும் மேடுகளிலும் தன்னந்தனியாக அலைந்து திரிந்தவன் ஆதிகால மனிதன். நாகரிகமில்லாமல் நாடோடியாக அலைந்து திரிந்தவன் நாளடைவில் குழு வாழ்க்கையின் பயன் கண்ட மனித இனம் இயற்கை வளம் கொண்ட பகுதிகளில் தங்கியும், நீர் நிலைகளை அடுத்து வாழிடங்களை அமைத்துக் கொண்டும் வாழத் தொடங்கினான். அப்படிப்பட்ட பழங்குடி அமைப்பிலிருந்து வளர்ந்து வந்தது தான் மனித சமுதாயம். இப்பழங்குடி மக்கள் இயற்கையோடு தங்களது வாழ்வினை இணைந்து ஆடம்பரம் இல்லாத இயல்பு வாழ்க்கை வாழ்பவர்கள். நாகரிகம் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் தங்களது மரபு ரீதியான வாழ்க்கையைத்தான் இன்னும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். காட்டுப் பகுதிக்குள் முழுமையாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் நிம்மதியான, சுகாதாரமான வாழ்வை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வேறு, காலங்களில் நெருக்கடிகளையும், துயரங்களையும், அழிவையும் சந்தித்தாலும், மரபு மாறாத பெருமைக்குரிய வாழ்வினையே மேற்கொள்கின்றனர். இச்சமூகத்தின் தொழில்கள், மருத்துவம், குடும்ப அமைப்பு, உணவு முறை, நம்பிக்கைகள், வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Published

01-10-2023

How to Cite

B.Anjali. (2023). பரம்பிக்குளம் வட்டார மலசர் வாழ்வியல்: Life of Malasar of Parambikulam Regin. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 1–8. https://doi.org/10.1024.pulam.0001