சீவகசிந்தாமணியில் கூறப்படும் திருமண முறைகள்
The marriage practices alleged in Seevaga Sinthamani
Abstract
Abstract
Our forefathers used to say that 'marriage is the crop of a thousand years'. Romantic marriages were often not allowed in Sanskrit. However, out of love for the leader, the bride went to the leader's house to do chores, stay there, learn about his heroic deeds, and test their patience. Similarly in today’s times and in the countryside the basis of heroism is doing heroic adventures like taming the bull, lifting the ivory, climbing the slippery tree and marrying the woman they thought in their mind. This method has been in practice since the Sangam period. In this article we will see in detail about the marriage methods mentioned in Sivakasinthamani such as mother marrying daughter, winning a contest, getting married by rescuing elephants, marrying by taming an elephant, removing poison by getting married.
ஆய்வுச்சுருக்கம்
நமது முன்னோர்கள் 'திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்' என்று கூறுவார்கள். சங்க காலத்தில் திருமணம் என்றால் அரச குடும்பத்தினர் வீதியெங்கும் பந்தலிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி திருவிழாக் கோலமாக நடத்திவந்தனர். சங்ககாலத்தில் பெரும்பாலும் காதல் திருமணம் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் தலைவன் தலைவி மேல் கொண்ட காதலினால் தலைவியின் வீட்டிற்குச் சென்று பணிவிடைகள் செய்வது, அங்கேயே தங்கி உண்டு வாழ்வது, அவரின் வீர செயல்களை அறிந்துகொள்வது, அவர்களின் பொறுமையை சோதிப்பது போன்ற பரீட்சைகளை மணப்பெண் வீட்டில் நடத்தினர். அதேபோன்று இன்றைய காலகட்டத்திலும் கிராமப்புறங்களிலும் வீரத்தின் அடிப்படையாகக் காளையை அடக்குவது, இளவட்டக்கல் தூக்குவது, வழுக்கு மரம் ஏறுவது போன்ற வீர சாகசங்கள் செய்து தங்களின் மனதில் நினைத்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கின்றனர். இம்முறை சங்க காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வருகின்றது. சீவகசிந்தாமணியில் கூறும் திருமண முறைகளான தாய்மாமன் மகளை திருமணம் செய்வது, போட்டியில் வென்று திருமணம் செய்வது, ஆநிரைகளை மீட்டு திருமணம் செய்வது, யானை அடக்கி திருமணம் செய்வது, விஷத்தை நீக்கி திருமணம் செய்வது, ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2022 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.