செவ்விலக்கியங்களில் வரலாற்றுத் தரவுகள்
Historical data on Sangam Literature
DOI:
https://doi.org/10.5281/zenodo.13955156Keywords:
மூவேந்தர், சமுதாயம், வரலாறு, பரணர், கொங்குநாடு, அதிகன், கோசகர்,Abstract
Abstract
Literature is created to enlighten and inspire. Literature can be a work of fiction or the social experiences of the creator. Therefore, there are differences of opinion on the extent to which the events and messages found in a creator's work are true. There are two different views on whether the messages conveyed by literary works should be considered to reflect the political, social, cultural history or intellectual maturity of a society or whether it is better to dismiss them as mere fictions.
The Tamil Sangam literature, which is considered as classical literature, also serves as historical evidence for the historians writing the history of the Sangha period. Historical records of hundreds of kings of the Sangam period and small land kings are found not only in external literature but also in internal literature. In general, some historians and critics assert that poetic literature cannot be used as historical sources and dismiss Sangha history based on these evidences as baseless.
The PaditruPatthu collection about the Chera kings, which is considered to be a collection of heroic hymns, are books that describe the heroic deeds of the kings of the Sangam period. Books such as Patuppattull and Aartuppa books and books like Pattinapalai are historical treasures. Apart from this, it is surprising that books such as Agananuru, a collection of internal hymns, also contain a lot of historical reference to the Sangam period. Strategies such as narrating historical events as parables and as metaphors are dealt with in these songs.
ஆய்வுச்சுருக்கம்
இலக்கியங்கள் அறிவூட்டவும் உணர்வூட்டவும் படைக்கப்படுகின்றன. இலக்கியங்கள் கற்பனைப் படைப்பாகவோ படைப்பாளியின் சமூக அனுபவங்களாகவோ இருக்கலாம். அதனால் ஒரு படைப்பாளியின் படைப்பில் காணும் நிகழ்வுகள், செய்திகள் யாவும் எத்தளவிற்கு உண்மையின் பாற்பட்டன என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இலக்கியப் படைப்புகள் தரும் செய்திகள் ஒரு சமுகத்தின் அரசியல் சமுக பண்பாட்டு வரலாற்றையோ அறிவு முதிர்ச்சியையோ பிரதிபலிக்கின்றன என்று கருதுவதா அன்றி வெறும் கற்பனைப் புனைவுகள் என்று அவற்றை ஒதுக்கி விடுதலே நன்றெனக் கருதுவதா என்று இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
செவ்வியல் இலக்கியங்களாகக் கருதப்படும் தமிழ்ச்சங்க இலக்கியங்கள் சங்க கால வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்களுக்கு வரலாற்றுச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. நூற்றுக்கணக்கான சங்க கால மன்னர்கள், குறுநில மன்னர்கள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் புறத்திணை இலக்கியங்களில் மட்டுமில்லாமல் அகத்திணை இலக்கியங்களிலும் இடம் பெறுகின்றன. பொது நிலையில் சில வரலாற்று ஆசிரியர்களும் விமர்சகர்களும் கவிதை இலக்கியங்களை வரலாற்று ஆதாரங்களாகக் கொள்வதற்கில்லை என்று உறுதிபடக் கூறி, இச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் சங்க வரலாற்றினையும் அடிப்படையற்றவை என்று புறந்தள்ளுகின்றனர்.
சேர அரசர்களைப் பற்றிய பதிற்றுப் பத்து தொகுப்பும் வீரயுகப்பாடல் தொகுப்பெனக் கருதப்படும் புறநானுறும் சங்க கால மன்னர்களது போர் வீரம் கொடை இவற்றைக் கூறும் நூல்கள் ஆகும். பத்துப்பாட்டுள்ளும் ஆற்றுப்படை நூல்களும் பட்டினப்பாலை போன்ற நூல்களும் வரலாற்றுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன. இவையன்றி , அகநானூறு போன்ற அகத்திணைப் பாடல்களின் தொகுப்பான நூல்களும் சங்க கால வரலாற்றுக் குறிப்பினை ஏராளமாகக் கொண்டிருக்கின்றன என்பது வியப்பானதாகும். வரலாற்று நிகழ்வுகளை உவமையாகக் கூறுதல், பிண்ணனியாகக் கூறுதல் போன்ற உத்தி முறைகள் இப்பாடல்களில் கையாளப்பட்டுள்ளன.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2024 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.