பிரபஞ்சன் சிறுகதைகளில் பெண் தனித்து வாழ்தலும் சுய சிந்தனையும்
In Prapanhan's short stories, Women live alone and Think about themselves
DOI:
https://doi.org/10.5281/zenodo.13955108Keywords:
பெண், ஆணாதிக்கம், வேலை, குடும்பம், அலுவலகம், சம உணர்வுAbstract
Absract
Patriarchy is inextricably embedded in women's lives. It has been established in the society that it is impossible for women to lead a life beyond the patriarchy. Patriarchy has taken away women's sense of self from the matriarchal society. This society celebrates the selfless woman as the ideal woman. A woman's progress since then is symbolized as the best progress. As educational opportunities proliferated, earning a living became a family affair. A woman is positioned as having no right to spend her earned income as she pleases. Nowadays women are able to get what they need with the permission of their husband and spend it. If the woman acts against this, she is socially excluded and her existence is degraded. A woman has to live dependent on a man, living alone is against the social order. Patriarchy has shaped women's existence to its own advantage and culturally stigmatizes their individuality as humiliating. A patriarchal society does not like women's self-determination. It marks women decision-makers as subversives and ostracizes them from society.
ஆய்வுச் சுருக்கம்
ஆணாதிக்கம் என்பது பெண்ணின் வாழ்வியலில் நீக்கமற நிறைந்துள்ளது. பெண்கள் ஆணாதிக்கத்தைக் கடந்த வாழ்வியலை மேற்கொள்வது இயலாத ஒன்றாக சமூகத்தில் நிலைபெற்றுள்ளது. தாய்வழிச்சமூகத்திலிருந்த பெண் தன்னுணர்வுகளை, ஆணாதிக்கம் வஞ்சனையுடன் பறித்துக்கொண்டது. தன்னுணர்வற்ற பெண்ணையே சிறந்த பெண்ணாக இச்சமூகம் கொண்டாடுகிறது. அதிலிருந்து ஒரு பெண் முன்னேற்றம் காண்பதே சிறந்த முன்னேற்றமாக அடையாளப்படுத்தப்படுகிறது. கல்வி வாய்ப்புகள் பெருகிய பிறகு ஒரு சம்பாதித்தல் என்பது குடும்பதற்கானதாக மாறியது. தான் ஈட்டிய வருமானத்தை தனக்குச் சொந்தமான பணத்தை தனது விருப்பப்படி செலவழிக்க உரிமையற்றவளான பெண் நிலைநிறுத்தப்பட்டுள்ளாள். தனக்கு வேண்டியதை கணவனின் அனுமதியுடன் பெற்று அதை செலவு செய்யக்கூடியவர்களாக சமகாலத்தில் பெண்கள் இருப்பு அமைந்துள்ளது. இதை மீறி பெண் செயல்பட்டால் அவளை சமூக விலக்கு செய்வதும் அவளது இருப்பை இழிவுக்குள்ளாக்குவதும் நடைபெறுகின்றது. பெண் ஆணைச் சார்ந்துதான் வாழவேண்டும், தனியாக வாழ்தல் என்பது சமூக ஒழுங்கிற்குப் புறம்பானது. ஆணாதிக்கம் பெண்களின் இருப்பை தனக்கு உகந்தவாறு கட்டமைத்து வைத்திருப்பதுடன் அவர்கள் தனித்திருப்பதை அவமானகரமானதாக பண்பாட்டு இழிவாக முன்னிறுத்தி வைத்துள்ளது. பெண் சுயமாக முடிவெடுத்தலை ஆணாதிக்கச் சமூகம் விரும்புவதில்லை. மீற் முடிவெடுக்கும் பெண்களை சமூகத்திற்கு ஒவ்வாத மனிதர்களாக அடையாளப்படுத்தி அதிலிருந்து புறந்தள்ளி விடுகிறது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2024 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.