திருக்குறள் முன்னிறுத்தும் பொதுவுடைமைச் சமூக வாழ்வியல்

Thirukkural advocates communal social life

Authors

  • அருணா. ரா | Aruna.R Assistant Professor, Department of Tamil, P.S.G.R. Krishnammal College for Women (Autonomous), Coimbatore.

DOI:

https://doi.org/10.5281/zenodo.13955078

Keywords:

திருக்குறள், திருவள்ளுவர், பின்காலனியம், பொதுவுடைமை, இலக்கியம், தமிழர்

Abstract

Abstract
Innumerable studies, texts, interpretations etc. have been published on Thirukkural from various angles. It mainly speaks of virtue for the people without construing any sign of authority as sacred. Thirukkural continues to be symbolized as a representation of bioethics. At the same time, there is an environment where religions claim Thirukkural as their own. Moral thinking is produced for the benefit of power. It weaves the psychology of those under power to suit power. Thirukkural rejects this thinking and demands adherence to the values ​​of primitive communal social life. It is not only for Tamils ​​but also for the entire world. However, there is a problem in identifying Thiruvalluvar among world literature. The European mind, which does not accept a Third World country as a great thinker, is reluctant to accept Kural as world literature. The situation is similar in the Indian context. This article examines the problem of identifying Thiruvalluvar as a significant thinker of world literature and the thought expressed in this text.

ஆய்வுச்சுருக்கம்
திருக்குறள் குறித்து எண்ணற்ற ஆய்வுகள், உரைகள், விளக்கங்கள் போன்றவை பல கோணங்களில் வெளிவந்துள்ளன. முக்கியமாக எவ்வித அதிகார அடையாளத்தையும் புனிதமாகக் கட்டமைக்காமல் மக்களுக்கான அறத்தைப் பேசுகிறது. திருக்குறள் உயிர்ம நேயத்தை முன்வைக்கும் பிரதியாகத் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் மதங்களும் திருக்குறளை தங்களுக்கானதாக வரித்துக்கொள்ளும் சூழலும் நிலவி வருகின்றன. அறச்சிந்தனை அதிகாரத்தின் நலனுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. அது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களின் உளவியலை அதிகாரத்திற்கு ஏற்றாற்போல் நெய்கிறது. இந்த சிந்தனையை திருக்குறள் மறுதலித்து அது ஆதிப்பொதுவுடைமைச் சமூக வாழ்வியலின் விழுமியங்களைக் கடைபிடிக்கக் கோருகிறது. இது தமிழுருக்கானதாக மட்டும் இல்லாமல் உலக முழுமைக்குமானதாக விரிந்து நிற்கிறது. இருப்பினும் உலக இலக்கியவாதிகளுள் திருவள்ளுவரை அடையாளப்படுத்திக் கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. மூன்றாம் உலக நாட்டைச் சார்ந்த ஒருவரை சிறந்த சிந்தனையாளராக ஏற்றுக் கொள்ளாத ஐரோப்பிய மனம் குறளை ஏற்றுக்கொண்டாலும் அதை உலக இலக்கியமாக அங்கீகரிப்பதில் தயக்கத்தைக் காட்டி வருகிறது. இந்தியச் சூழலிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திருவள்ளுவர் உலக இலக்கியச் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவராக அடையாளப்படுத்துவதில் நிலவும் சிக்கலையும் இப்பிரதி வெளிப்படுத்தும் சிந்தனையையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

Downloads

Published

01-10-2024

How to Cite

அருணா. ரா. (2024). திருக்குறள் முன்னிறுத்தும் பொதுவுடைமைச் சமூக வாழ்வியல்: Thirukkural advocates communal social life. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 4(4), 1–7. https://doi.org/10.5281/zenodo.13955078