தமிழ் இலக்கணங்களில் அடைகள்
Parts of Speech in Tamil Grammars
Keywords:
தமிழ் இலக்கணம், அடை, பெயரடை, பெயரெச்சம், வினையடை, வினையெச்சம், இடைச்சொல், உரிச்சொல்.Abstract
Abstract
A Complete sentence can consist of several components. Not all sentences have all the sentence components. However, some of these elements are essential. The Constituents of the sentence are subject. verb and object. It is not an exaggeration to mention that ‘Adai’ is the most important element that has been transformed and used without becoming obsolete. Because in traditional grammers, plurals are represented by adjectives. Overtime, adjectives were not limited to the words Sala, Uru, Tava, Nani, Koor, Kazhi and accepted the name Adai, when raising the noun it is given as an Adjective and when raising the verb it is given as a Adverb. Conventional grammers did not establish the category of adverb. Instead, they are presented as Vinaiyechangal and Idaisorkal. Thus, this paper aims to explain what is scattered as Vinaiyecham, Idaisol and Urisol together with the type of ‘Adai’.
ஆய்வுச்சுருக்கம்
ஒரு முழுமை பெற்ற வாக்கியம் பல கூறுகளைக் கொண்டு அமையலாம். எல்லா வாக்கியங்களிலும் வாக்கியத்திற்குரிய எல்லாக்கூறுகளும் இருப்பதில்லை. எனினும் இவற்றில் சில கூறுகள் இன்றியமையாதவை. வாக்கியத்தின் உட்கூறுகளாக எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், அடை, இணைப்புச்சொல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதனுள் ‘அடை’ காலத்திற்கேற்ப உருமாற்றம் பெற்று வழக்கொழியாமல் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மிக முக்கியமான கூறு என்று குறிப்பிடுவது மிகையாகாது. ஏனெனில், மரபிலக்கணங்களில் மிகுதிப் பொருளை உணர்த்தும் சொற்கள் உரிச்சொல் என்ற சொல்லடைவால் வழங்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் உரிச்சொற்கள் சால, உறு, தவ, நனி, கூர், கழி என்ற சொற்களில் மட்டுமே நின்றுவிடாமல் அடை என்ற பெயரை ஏற்று பெயரை உயர்த்தும்போது பெயரடை என்றும், வினையை உயர்த்தும்போது வினையடை என்றும் வழங்கப்படுகிறது. மரபிலக்கணங்களில் வினையடை என்ற வகைமை ஏற்படுத்தப்படவில்லை. மாறாக வினையெச்சங்களாகவும், இடைச்சொற்களாகவுமே அவை வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு வினையெச்சம், இடைச்சொல், உரிச்சொல்லாக சிதறியவற்றை ஒருங்கே அடை என்ற வகைமையால் விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.