தமிழ் இலக்கியங்களில் அறக்கோட்பாடு

Tamil Ilakiyangalil Arakkotpadu

Authors

  • பிரஷிலா.சு| Prashila.S Assistant Professor, Department of Tamil, Sri Ramakrishna College of Arts and Science – 641006

DOI:

https://doi.org/10.5281/zenodo.12788916

Keywords:

அறம், இலக்கியம், குறள், சமுதாயம், கோட்பாடு, Aram, Literature, Kural, Society, Philosophy

Abstract

Abstract
Our forefathers were the ones who were determined to live a virtuous life in everything be it virtue, material, pleasure, home. They have lived to live virtuously because one's good qualities mark one's superiority over others. Dictionaries interpret many things like chastity, duty, virtue, charity, and dignity for the word virtue. But before the appearance of the word aram in Tamil, words like proverb, mudurai, thank you, goodness, morality, morals, duty etc. were in use. Virtue is the moral system that man defines for himself. There is no greater wealth in this world than doing good deeds. Virtue can increase a person's life span. Stands for a good way to go. The mind is the source of the greatest creative power and intellectual power. Therefore, it is impossible to analyze the characteristics of various people and say whether the activity is virtuous, whether the activity is non-virtuous or neutral. Therefore, the common characteristics and elements of a particular land should be explored with the help of literature written on behalf of various population groups. In this way, the moral principles expressed in the literature will form the basis for all kinds of good deeds as the unanimous voice of the society. Similarly, different virtues can be found in literature according to time. As an example of this, Tamil literature expresses virtue in books such as Tirukkural, Naladiayar, Nanmanikadikai, and Sangha literature. Thus, this review article is intended to highlight moral messages.
ஆய்வுச்சுருக்கம்
நம் முன்னோர்கள் அறம், பொருள், இன்பம், வீடு என அனைத்திலும் நற்பண்புகளை கடைபிடித்து வாழ வேண்டும் என்று உறுதியாய் வாழ்ந்தவர்கள். ஒருவருடைய நல்ல பண்புகளை மற்றவர் இடத்தில் மேன்மை உள்ளவராக அடையாளப்படுத்தும் என்பதால் அறத்தினைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று வாழ்ந்துள்ளனர். அறம் என்ற சொல்லுக்கு கற்பு, கடமை, புண்ணியம், தர்மம், கண்ணியம் என பல பொருட்களை அகராதிகள் எடுத்து உரைக்கின்றன. ஆனால் தமிழில் அறம் என்ற சொல் தோன்றுவதற்கு முன்பு பழமொழி, மூதுரை, நன்றி, நன்மை, நன்னெறி, ஒழுக்கம், கடமை போன்று சொற்கள் வழக்கத்தில் இருந்துள்ளன. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளை அறம் என்று கூறலாம். இவ்வுலகில் ஒருவனுக்கு அறம் செய்வதை காட்டிலும் மிகுந்த செல்வம் வேறில்லை. அறம் மனிதனுடைய ஆயுள் காலத்தை கூட்டக்கூடியதாக இருக்கிறது. நல்ல வழியில் செல்வதற்கு துணை நிற்கிறது. மனமே மிகப்பெரிய ஆக்க சக்திக்கும் அறிவு சக்திக்கும் காரணமாகும். எனவே பலதரப்பட்ட மக்களின் குணநலன்களை எல்லாம் ஒப்பு நோக்கி இன்னார் செயல்பாடு அறம் சார்ந்தது, இன்னார் செயல்பாடு அறம் சாராதது, இன்னார் நடுநிலைமையானவர் என்று ஆய்ந்து சொல்லுதல் இயலாதது. எனவே பல்வேறு மக்களின் சார்பாய் படைக்கப்பட்ட இலக்கியங்களின் துணையுடன் குறிப்பிட்ட நிலத்திற்குரிய பொதுவான பண்புகளையும் கூறுகளையும் ஆராய்தல் வேண்டும். அவ்வகையில் இலக்கியங்கள் கூறும் அறக்கோட்பாடுகள் சமுதாயத்தின் ஒருமித்த குரலாக எல்லா விதமான நற்செயல்களுக்கும் அடித்தளமாக அமையும். அதேபோல் காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட அறங்கள் இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.இதனை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ் இலக்கியங்கள் அறத்தை வெளிப்படுத்துவதாக திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை மற்றும் சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களில் அறம் சார்ந்த செய்திகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறு அறம் சார்ந்த செய்திகளை எடுத்துரைப்பதாக இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.

Downloads

Published

01-07-2022

How to Cite

Prashila.S. (2022). தமிழ் இலக்கியங்களில் அறக்கோட்பாடு: Tamil Ilakiyangalil Arakkotpadu. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 4(3), 32–38. https://doi.org/10.5281/zenodo.12788916

Similar Articles

<< < 1 2 3 4 5 6 

You may also start an advanced similarity search for this article.