புறநானூற்றுச் சோழ வேந்தர்களைப் பாடிய புலவர்கள்

Poets who sang Purananutru Chola Vendhars

Authors

  • முனைவர் ரேணுகா. வே | Dr V.Renuka Asistant Professor, Vivekanandha College of Arts and Sciences for Women (Autonomous), Tiruchengode - 637 205

Keywords:

சங்ககாலம், சோழநாடு, புறநானூறு, புலவர்கள், Sanga Kalam, Chola Nadu, Purananuru, Pulavargal

Abstract

Abstract

                   To Knowthe Social Structure and Cultural Elements of a Country, it is necessary to know about the Poets of thatCountry. Based onthat,Purananutru Poets Knowing about Thirty Five Poets including Twenty Eight Male Poets who have sung Eighteen CholaVendras, Three Female Poets and FourChola Royal Poets who have Sung Poetry themselves as CholaVendraswill Lead to improvement of this Analysis.It is Possible to Learn about the Cultural Elements that Prevailed in the Chola country during the Sangam Period by Examining the Characteristics at these PurananutruPoets Such as Sharp knowledge, Eloquence, High Thinking and Eloquence. In Particular, it is Possible to learn about Moral Virtues such as Character, Resilience, Martial Virtue and the Status of Women. It is Possible toLearn about the Educational Level of these People from the King to the Common Citizen who does not belong toany Race or Community. Also, it is Possible to Know the Life and Historical Information ofthat day. Therefore, this Article examines the Poets who sang Purananutru Chola Vendras.

ஆய்வுச்சுருக்கம்

ஒரு நாட்டின் சமூகக் கட்டமைப்பையும், பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்வதற்கு, அந்நாட்டுப் புலவர்கள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும். அதன் அடிப்படையில் புறநானூற்றில் இடம் பெற்றுள்ள பதினெட்டுச் சோழ வேந்தர்களைப் பாடியுள்ள இருபத்தெட்டு ஆண்பாற் புலவர்கள், மூன்று பெண்பாற் புலவர்கள் மற்றும் சோழ வேந்தர்களாக வீற்றிருந்து தாமே கவி பாடிய நான்கு சோழ அரசப் புலவர்கள் உள்ளிட்ட முப்பத்தைந்து புலவர்கள் குறித்தும் அறிந்து கொள்வது இவ்வாய்வு செம்மையுற வழிவகுக்கும். இப்புறநானூற்றுப் புலவர்களின் கூர்ந்த அறிவு, வருவது உரைக்கும் ஆற்றல், உயரிய சிந்தனை, சான்றாண்மை உள்ளிட்டப் பண்புகளை ஆராய்ந்து, அவர்களது படைப்பாற்றல் திறனை மதிப்பிடுவதன் வாயிலாக சங்ககாலச் சோழநாட்டில் நிலவிய பண்பாட்டுக் கூறுகள் குறித்து அறிந்து கொள்ள இயலுகின்றது. குறிப்பாக, புறப்பாடல் ஒழுக்கங்களான சான்றோர் இயல்பு, வள்ளல் தன்மை, போர்அறம் மற்றும் மகளிரின்நிலை குறித்து அறிந்து கொள்ள இயலுகின்றது. ஒரு இனத்தையோ, சமூகத்தையோ சார்ந்திடாத அரசன் முதல் எளிய குடிமகன் வரையிலான இப்புலவர்களின் கல்விநிலை குறித்து அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், அன்றைய வாழ்வியலையும், வரலாற்றுத்தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆதலால், புறநானூற்றுச் சோழ வேந்தர்களைப் பாடிய புலவர்கள் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Downloads

Published

01-07-2023

How to Cite

முனைவர் ரேணுகா. வே. (2023). புறநானூற்றுச் சோழ வேந்தர்களைப் பாடிய புலவர்கள் : Poets who sang Purananutru Chola Vendhars. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(3), 22–35. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/138