தாய்வழிச் சமூக மறுதலிப்பும் பாலின முரண்பாடும்

Maternal social rejection and Gender discord

Authors

  • முனைவர் ப.சின்னச்சாமி | Dr. P. Chinnasamy Assistant Professor, Tamil Department, Rathnavel Subramaniam College of Arts and Science (Autonomous), Sulur, Coimbatore. https://orcid.org/0000-0001-9617-1426

DOI:

https://doi.org/10.1024.pulam.0003

Keywords:

ஆணாதிக்கம், முரண், ஒழுக்க உடல், ஒழுக்கமற்ற உடல், பெண், தாய்வழிச் சமூகம், Patriarchy, Paradox, Moral body, Immoral body, Woman, Matriarchal society

Abstract

Abstract

In today's postcolonial context, the study of literary texts through theory is proliferating. Tamil theoreticians believe that the results obtained through it are different from the stereotyped ideas and create new thinking bases. Importantly, classical texts, when read theoretically, reveal the state of society at that time and sharpen the knowledge base of the present. By binding the sacred images built on classical texts, the common sense imposed on the life of Tamils can be aimed at. It can be seen that even though the conceptualist ideas which were built in the intellectual capacity of the thinkers of that day prevailed, materialism could not be avoided.

Power had a wide range in feudal society where patriarchy was established. Even in those days when the traditions of Shramana were dominant, the patriarchal thought of Shramana did not celebrate women through the concept of chastity and denigrated them as ugly bodies. Proposing the hypothesis that the thinkers who were in the division of dominants×marginalists have not deviated from the tradition of patriarchal thinking based on gender and have taught virtues that push back the matriarchal society and make the patriarchal power mainstream, it examines the way in which one of the eighteen books, Surupanchamoolam, portrays women. This essay aims to reveal the dialectical function by which moral theories are constructed on women and transform her into a theoretical organism.

 

 

ஆய்வுச் சுருக்கம்

இன்றைய பின்காலனியச் சூழலில் கோட்பாடுகளின் வாயிலாக இலக்கியப் பிரதிகளை ஆராய்தல் பெருகி வருகிறது. அதன்வழி கண்டடையப்படும் முடிவுகள் செல்லரித்துப் போன கருத்துகளிலிருந்து வேறுபட்டு புதிய சிந்தனைத் தளங்களை உருவாக்கி வருவது ஆரோக்கியமான ஒன்றாக உள்ளது என்று தமிழ் கோட்பாட்டாய்வாளர்கள் கருதுகின்றனர். முக்கியமாக, செவ்வியல் பிரதிகளைக் கோட்பாட்டு வாயிலாக வாசிக்கும்போது அது அன்றைய சமூகத்தின் நிலையை வெளிப்படுத்துவதுடன் தற்காலத்தின் அறிவுத் தளத்தைக் கூர்மைப்படுத்துகின்றன.  செவ்வியல் பிரதிகளின் மீது கட்டமைக்கப்பட்ட புனித பிம்பங்களை கட்டுடைப்பதன்வழி தமிழரின் வாழ்வியல் மீது திணிக்கப்பட்ட பொதுப்புத்திகள் திரைவிலகுவதை நோக்கமுடிகிறது. அன்றைய சிந்தனையாளர்களின் அறிவுத் திறனில் கட்டமைத்திருந்த கருத்து முதல்வாத சிந்தனைகள் மேலெழுந்தவாரியாக இருந்தாலும் பொருள்முதல்வாதத்தைத் தவிர்க்க முடியாத நிலைகளும்  அப்பிரதிகளில் மையம் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

தந்தைமைய அதிகாரம் நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூகத்தில் அதிகாரம் பரந்துபட்ட எல்லையைக் கொண்டிருந்தது. சிரமண மரபுகள் ஆதிக்கம் பெற்ற அன்றைய காலகட்டத்திலும் ஆணாதிக்கச் சிந்தனை சிரம் தாழ்த்தாது பெண்களைக் கற்பு கருத்துருவத்தின் வழி கொண்டாடுவதும் இழி உடலாகத் தூற்றுவதும் நிகழ்ந்தேறியுள்ளது. ஆதிக்கவாதிகள்×விளிம்புநிலையினர் என்ற பாகுபடுத்தலுக்குள் இருத்தப்பட்ட சிந்தனையாளர்கள் பாலின அடிப்படையில் ஆணாதிக்கச் சிந்தனை மரபிலிருந்து விலகாது செயல்பட்டுள்ளதையும் தாய்வழி சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளி தந்தைமைய அதிகாரத்தை மைய நீரோட்டமாக்கும் அறங்களை போதித்துள்ளனர் என்ற கருதுகோளை முன்வைத்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலம் எனும் அறப்பிரதி பெண்களைச் சித்திரிக்கும் விதத்தை ஆராய்கிறது. பெண்ணின் மீது அறக் கோட்பாடுகள் கட்டமைக்கப்பட்டு அவளைத் தத்துவார்த்த உயிரியாக மாற்றப்பட்டிருக்கும் இயங்கியல் செயல்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Published

01-10-2023

How to Cite

Dr P. Chinnasamy. (2023). தாய்வழிச் சமூக மறுதலிப்பும் பாலின முரண்பாடும் : Maternal social rejection and Gender discord. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 18–26. https://doi.org/10.1024.pulam.0003